PAGES

Tuesday, May 15, 2018

பலா சுளையில் இருக்கும் எண்ணற்ற நன்மைகள்



பலாச்சுளையை அதன் தித்திப்புக்காக வாங்கி உண்போம். ஆனால் பலாவில் இனிப்புடன், ஆரோக்கிய நலன்களை அளிக்கும் பல மருத்துவக் குணங்களும் அடங்கியிருக்கின்றன.

உதாரணமாக, பலாச்சுளையில் வைட்டமின் சி, தாது உப்புகள், நார்ச்சத்து, மாவுச்சத்துகள் நிறைந்திருப்பதால், நல்ல சக்தியைத் தரும்.

பலாமரத்துப் பாலை கட்டிகளின் மீது தடவினால் வீக்கம் குறையும். வேரை பாலிட்டு அரைத்து சொறி, சிரங்குகளுக்குப் பூசலாம்.

பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் ரத்தசோகை வராமல் தடுப்பதோடு, உடலில் ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.

ஆஸ்துமாவால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் இதன் வேரை வேகவைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாறைக் கலந்து குடித்தால் ஆஸ்துமா தொல்லை அகலும். தைராய்டு குறைபாடு உள்ளவர்கள், இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் நலம் பயக்கும். மேலும் இது உடலுக்குத் தேவையான ஹார்மோனை உற்பத்தி செய்ய உதவுகிறது.

குழந்தைகள் பலாப்பழத்தை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது.

பலாச்சுளையில் வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால், இது ஒரு சிறந்த ஆன்டிஆக்சிடன்ட் ஆக உள்ளது. இந்தப் பழத்தைச் சாப்பிட்டால், உடலை பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கிறது.

பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இது வயிற்றுப்புண், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோயாளிகளுக்கு ஏற்றது.

பலாவில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும் வலுவை அளிக்கும். சருமத்தை மிருதுவாகவும், வழவழப்பாகவும் ஆக்கும், நரம்புகளுக்கு உறுதி தரும்.

நெய் அல்லது தேன் கலந்த பலாப்பழத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்பெறும்.

இவ்வளவு நன்மைகள் நிறைந்திருந்தாலும் பலாப்பழத்தை அளவோடு சாப்பிட வேண்டும். சர்க்கரை நோயாளிகள் இப்பழத்தைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment