கல்லீரல், மண்ணீரல் பிரச்சனைகள் தீர மருதாணிச் செடியின் பட்டைகளை நீரில் ஊறவைத்து பின்பு அந்த நீருடன் தேன் கலந்து காலை மாலை என இருவேளையும் குடித்துவந்தால் கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்கள் குணமாகும்.
இளநரை நீங்க மருதாணி இலைச் சாறு (2 லிட்டர்), நல்லெண்ணெய் (2லிட்டர்), பசும்பால் (2லிட்டர்), மூன்றையும் ஒன்றாகக் கலந்து காய்ச்சி வைத்துக்கொண்டு தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை நீங்கும்.
பித்தவெடிப்பு நீங்க மருதாணி இலையை தயிர் சேர்த்து அரைத்து, இரவு படுப்பதற்கு முன் காலில் உள்ள பித்த வெடிப்புகளில் தடவிகொண்டு வந்தால் விரைவில் பித்த வெடிப்பு குணமாகும்.
நன்றாகத் தூக்கம் வர மருதாணிப் பூக்களைப் பறித்து, தலையணையின் கீழ் வைத்து படுத்தால் நன்றாகத் தூக்கம் வரும்.
தேமல், படை குணமாக மருதாணி இலைச் சாறு, வெங்காயச் சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து தேமல், படை மீது இரவில் தடவி காலையில் குளித்து வந்தால் விரைவில் குணம் பெறலாம்.
முடி கருப்பாக மாற மருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் தேங்காய் எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்துவந்தால் முடி கறுப்பாக மாறும்..
Excellent information to ALL subjects for EVERYBODY..THANK YOU A LOT.
ReplyDelete