Friday, May 18, 2018

நாள் முழுக்க உட்கார்ந்தே வேலை பாக்குற ஆளா நீங்க?... அடடா! அப்போ நீங்க இத படிச்சே ஆகணுமே..

Image result for நாள் முழுக்க உட்கார்ந்தே வேலை பாக்குற ஆளா நீங்

மனித உடலின் மிகவும் உன்னதமான உறுப்பு மூளை. மனித மூளையின் செயல்பாடுகள் குறித்தும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நாம் மூளை அனைத்து சமயங்களிலும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நாம் உறங்கும் பொழுது கூட மூளை செயல்பாட்டில்தான் உள்ளது. 

இன்று இருக்கும் MRI மாதிரியான Nural Imagining Technic's மூலமாக நடப்பது , பேசுவது போன்ற சிறு செயல்களுக்கு கூட மூளையின் பெரும்பாலான பகுதியைப் பயன்படுத்துவதாக நாம் அறிய முடிகிறது. ஒரு சமயத்தில் 1-16% மூளை இயங்கும். நம் எந்த செயல்கள் செய்கிறோமோ அந்த பகுதியை மட்டும் நம் மூளை இயக்கும். இது நம் மூளை திறன்பட செயல்படுவதைக் குறிக்கிறது. நினைவாற்றல் தொடர்பான பணிகளின் செயல்திறனை நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் குறைகிறது

உட்கார்ந்து வேலை செய்தல் 

நாம் அதிக நேரம் உட்கார்ந்திருக்கும் பொழுது மூளையின் செயல்பாட்டை பற்றி ஆராய்ச்சியாளர்கள் சில ஆராச்சியை மேற்கொண்டனர். அந்த ஆராய்ச்சியின் மூலமாக மனிதனின் முளையின் நினைவாற்றல் திறன் மாறுபடுவதாகக் கண்டுபிடித்துள்ளனர் .இந்த கண்டுபிடிப்பை 100% உலகில் உல்ல அனைத்து ஆராய்ச்சி மையங்களாலும் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. 

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் 

  • சக்கரை நோய்(Type 2 Diabetes) ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். 
  • கெட்ட கொலெஸ்ட்ரால் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் . 
  • நாம் உட்காந்திருக்கும் பொழுது தலையை குனியும்பொழுது oxygen அளவும் நுரையீரலுக்கு செல்வது குறைகிறது. அதனால் இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் .
  • நாம் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்த்திருப்பதால் செய்யும் வேளையில் கவனக்குறைவு அதிகரிக்கும் . 
  • உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் அகிகம்
கடைபிடிக்கவேண்டிய பழக்கங்கள்:

1. இரண்டு மணி நேரத்துக்கு இடையில் சிறிது நேரம் நடைபயணம் மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

2. எப்பொழுதும் படிக்கட்டுகளைப் பயன்படுத்துவது சிறிது உடற்பயிசியையும், உயிர்ச்சக்தியையும் அதிகப்படுத்தும். 

3. நின்றும் அமர்ந்தும் வேலையைத் தொடரும் மேஜைகளை ( sitting and standing desk ) பயன்படுத்தலாம்.

4. அதிகமாக தண்ணீர் குடிப்பது நம் அலுவலகச் சூழலில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதை தவிர்க்க உதவும். நம் உடல் உற்சாகத்துடன் செயல்படும்பொழுது நம் மூளை திறன்பட செயல்பட வழி செய்கிறது.


No comments:

Post a Comment