Wednesday, May 16, 2018

மருதாணி மருத்துவ குணங்கள்


Image result for maruthani
  • கல்லீரல், மண்ணீரல் பிரச்சனைகள் தீர மருதாணிச் செடியின் பட்டைகளை நீரில் ஊறவைத்து பின்பு அந்த நீருடன் தேன் கலந்து காலை மாலை என இருவேளையும் குடித்துவந்தால் கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்கள் குணமாகும்.
  • இளநரை நீங்க மருதாணி இலைச் சாறு (2 லிட்டர்), நல்லெண்ணெய் (2லிட்டர்), பசும்பால் (2லிட்டர்), மூன்றையும் ஒன்றாகக் கலந்து காய்ச்சி வைத்துக்கொண்டு தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை நீங்கும்.
  • பித்தவெடிப்பு நீங்க மருதாணி இலையை தயிர் சேர்த்து அரைத்து, இரவு படுப்பதற்கு முன் காலில் உள்ள பித்த வெடிப்புகளில் தடவிகொண்டு வந்தால் விரைவில் பித்த வெடிப்பு குணமாகும்.
  • நன்றாகத் தூக்கம் வர மருதாணிப் பூக்களைப் பறித்து, தலையணையின் கீழ் வைத்து படுத்தால் நன்றாகத் தூக்கம் வரும்.
  • தேமல், படை குணமாக மருதாணி இலைச் சாறு, வெங்காயச் சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து தேமல், படை மீது இரவில் தடவி காலையில் குளித்து வந்தால் விரைவில் குணம் பெறலாம்.
  • முடி கருப்பாக மாற மருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் தேங்காய் எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்துவந்தால் முடி கறுப்பாக மாறும்..

1 comment:

  1. Excellent information to ALL subjects for EVERYBODY..THANK YOU A LOT.

    ReplyDelete