Monday, June 11, 2018

குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா? இதோ நம் முன்னோர்கள் விட்டு சென்ற இயற்கை வைத்திய முறை உங்களுக்காக.!!

Related image

குழந்தை பாக்கியம் கிடைப்பது தாமதமாகுவதற்கு, நம்முடைய உடல்நிலை, வாழ்க்கைமுறை, உணவுப் பழக்க வழக்கம் என்று பல விஷயங்களை காரணமாக கூறலாம்.

மாதவிலக்கு கோளாறுகளினாலும் குழந்தை பேறு தள்ளி போக வாய்ப்புள்ளது.

அப்படி, மாதவிலக்கு கோளாறுதான் குழந்தை பேறு தள்ளி போக காரணம் என்றால், அந்த பிரச்சனையை சரி செய்ய நமது முன்னோர்கள் இயற்கை வைத்தியத்தை விட்டு சென்றுள்ளனர்.

அந்த வைத்திய முறைகளை பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க…

வைத்தியமுறை 1 :

அரை லிட்டர் பாலில், கால் கிலோ மலைப் பூண்டை உரித்து போட்டு நன்றாக வேக வையுங்கள்.


அந்த கலவை நன்றாக சுண்டி அல்வா பதத்திற்கு வந்ததும், தேவையான அளவு கற்கண்டு ,அல்லது பனங்கற்கண்டு போட்டு கிளறி இறக்கி வையுங்கள்.

மாதவிலக்கான நாட்களிலிருந்து ஒரு வாரம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதைச் சாப்பிட்டு வந்தால், கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

வைத்தியமுறை 2 :

பசும் மஞ்சள், மலை வேம்பு சாறு, நல்லெண்ணெய் இவை அனைத்தையும் சம அளவில் எடுத்து கொள்ளுங்கள். இதனை சூடு பண்ண தேவையில்லை.


மாதவிலக்கான முதல் மூன்று நாட்களில் காலை, மாலை என இரண்டு வேளையும் தலா ரெண்டு டேபிள்ஸ்பூன் சாப்பிடவேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

வைத்தியமுறை 3 :

உடம்பில் ஊளைச் சதை அதிகம் இருந்தாலும் கரு உண்டாவதில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அப்படி குண்டாக இருப்பவர்கள், தினமும் சின்ன வெங்காயத்தை எடுத்து பச்சையா சாப்பிட்டால் சில நாட்களிலேயே ஊளைச் சதை குறைந்து ஒல்லி ஆகிவிடுவார்கள். அப்புறம் என்ன..? உங்க வீட்டில் சீக்கிரமே வீட்டுல ‘குவா குவா’ சத்தமும் கேட்கும்..

No comments:

Post a Comment