Monday, June 18, 2018

சிறுநீர்க் கற்களை எந்தெந்த காய்கறிகள் கரைக்கும் தெரியுமா?

Image result for சிறுநீர்க் கற்களை எந்தெந்த காய்கறிகள்

சிறுநீரகக் கல் பிரச்சினை சிலரை பாடாய்ப்படுத்தும். ஆனால் சில காய்கறிகளைச் சாப்பிடுவதன் மூலம் இயற்கையாகவே சிறுநீரகக் கற்களைக் கரைக்கலாம்.

சிறுநீரகக் கல் பிரச்சினை சிலரை பாடாய்ப்படுத்தும். ஆனால் சில காய்கறிகளைச் சாப்பிடுவதன் மூலம் இயற்கையாகவே சிறுநீரகக் கற்களைக் கரைக்கலாம்.

அந்தக் காய்கறிகள் பற்றி…

* கேரட், பாகற்காயில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை சிறுநீரகக் கற்களைப் படியவிடாமல் தடுத்து, அவற்றைக் கரைக்கவும் உதவுகின்றன.

* வாழைப்பழம், எலுமிச்சம்பழத்தில் உள்ள வைட்டமின் பி6, சிட்ரேட் ஆகிய சத்துகள், சிறுநீரகக் கற்களின் ஆக்சலேட் என்ற வேதிப்பொருளுடன் சேர்ந்து அதைச் சிதைத்து, படியவிடாமல் தடுக்கின்றன. சிறுநீரகக் கற்கள் உருவாகாமலும் தடை போடுகின்றன.

* அன்னாசிப் பழத்தில் சிறுநீரகக் கற்களின் ‘பைப்ரினை’ சிதைக்கும் நொதிகள் உள்ளன. எனவே இப்பழம் எளிதில் சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்.

* கொள்ளு, பாதாம்பருப்பு, பார்லி, ஓட்ஸ் போன்றவையும் சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்கும்.

* சிறுநீரகக் கல் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் இளநீர் குடிக்க வேண்டும். அதோடு, சிட்ரஸ் பழச்சாறுகள், வாழைத்தண்டுச் சாறு போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* சிறுநீரகக் கல்லால் தவிப்பவர்கள் பாஸ்பேட் மிகுந்த காபி, டீ, பிளாக் டீ, சோடா, செயற்கை குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

* அன்றாடம் சாப்பிடும் உணவில் உப்பு, புளி, காரம், மசாலா ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment